சிறைச்சாலைகளில் இருந்து தப்பியோடிய 49 கைதிகள்: தேடுதல் நடவடிக்கைள் தீவிரம்
Sri Lanka Police
Sri Lankan Peoples
Department of Prisons Sri Lanka
By Dhilak
சிறிலங்கா சிறைச்சாலைகளில் இருந்து இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் சுமார் 49 கைதிகள் தப்பியோடியுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
தப்பியோடியவர்களில் இருவர் மாத்திரமே இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளரும் ஊடகப்பேச்சாளருமான காமினி பி.திசாநாயக்க கூறியுள்ளார்.
இதன்படி, தப்பியோடியவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கைது நடவடிக்கை
இதேவேளை, வீரவில திறந்தவெளி சிறைச்சாலை முகாமிலிருந்து நேற்றிரவு கைதி ஒருவர் தப்பியோடியுள்ளதாகவும் தகாத முறைக்குட்படுத்திய குற்றச்சாட்டில் குறித்த கைதிக்கு அநுராதபுரம் நீதிமன்றத்தினால் தண்டனை வழங்கப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை வீரவில காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி