இரும்புச்சத்து அளவை அதிகரிக்க நீங்கள் உட்கொள்ள வேண்டிய 05 காய்கறிகள்
நம் உடல் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு தேவைப்படும் ஒரு அத்தியாவசியமான மினரல் இரும்பு சத்து ஆகும். முக்கியமாக இரத்த உற்பத்திக்கு உடலுக்கு தேவையானது.
இந்த இரும்பு சத்தை பயன்படுத்தி தான் நம் நுரையீரலில் இருந்து உடலின் அனைத்து பாங்களுக்கும் ஒக்சிசனை ஹீமோகுளோபின் எடுத்து செல்கிறது.
மேலும், தசைகளுக்கு ஒக்சிசனை வழங்கும் புரதமான மயோகுளோபினுக்கும் போதுமான இரும்பு சத்து தேவைப்படுகிறது.
இரும்பு சத்து குறைபாடு காரணமாக நம் உடலில், சிவப்பு இரத்த அணுக்களின் குறைவான எண்ணிக்கையால் பாதிக்கப்படலாம். எனவே இரும்புச்சத்து அளவை அதிகரிக்கும் 5 சிலுவை காய்கறிகள் பற்றி இப்பதிவின் வாயிலாக அறிந்துக்கொள்வோம்.
ப்ரோக்கோலி
சிலுவை காய்கறிகளான ஊட்டச்சத்த நிறைந்த ப்ரோக்கோலி இரும்பு அளவை அதிகரிக்க உதவுகிறது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துகிறது. அத்துடன் இரத்த சர்க்கரை அளவை பராமரிக்கிறது.

சுவிஸ் சார்ட்
இந்த காய்கறி இரும்பு, பொட்டாசியம் மற்றும் விட்டமின் ஏ ஆகியவற்றின் நல்ல மூலமாகும். நார்ச்சத்து நிறைந்த சுவிஸ் சார்ட் உடல் எடையை குறைக்க உதவுகிறது.

மேலும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, இரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவுகிறது.
கீரை
பசலைக்கீரை இரும்புச்சத்துக்கான சிறந்த மூலமாகும். இந்த இலை பச்சை காய்கறி ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும் பல ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது.

பிரஸ்ஸல்ஸ் முளைகள்
இரும்பு, விட்டமின் சி மற்றும் கே, ஃபோலேட் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால், பிரஸ்ஸல்ஸ் முளைகளை உ்ங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

அவை சோர்வு மற்றும் இரத்த சோகையை தடுக்க உதவும்.
கேல் கீரை
கேலில் இரும்பு, கல்சியம் மற்றும் விட்டமின்கள் சி,ஏ,கே அதிகமாக உள்ளது.

இது மூளை மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும். மேலும் இது நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்த உதவும்.