அனுமதிப் பத்திரம் இல்லாத பேருந்துகளுக்கு 5 இலட்சம் அபராதம்: எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
நாட்டில் வீதி அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளுக்கான அபராதத்தை ஐந்து இலட்சம் ரூபாவாக அதிகரிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (National Transport Commission) தீர்மானித்துள்ளது.
3,200 தொலைதூர சேவை பேருந்துகள் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் ஒழுங்குமுறையின் கீழ் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை பயணிகள் பெரும்பாலும் வீதி அனுமதிப்பத்திரம் இல்லாத பேருந்துகளில் ஏற்றிச் செல்லப்படுகிறனர் என சுட்டிக்காட்டப்படுகின்றது.
வழக்குத் தொடர நடவடிக்கை
குறிப்பாக, வெள்ளவத்தை மற்றும் மருதானையை அண்மித்த பகுதிகளில் வீதி அனுமதிப்பத்திரம் இல்லாத பேருந்துகள் நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.peoples
இதன்போது சட்டவிரோதமான முறையில் பயணிகளை ஏற்றிச் செல்லப்படுகின்ற பேருந்துகளை கண்டறிந்து வழக்குத் தொடர தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.... |