இந்த செடிகளை வீட்டில் வளர்த்தால் என்ன நன்மை தெரியுமா.....
கொளுத்தும் வெப்பத்தில் இருந்து தப்பித்துக்கொள்ள மழைக்காலம் நிவாரணம் தருகிறது, ஆனால் அது பல நோய்களையும், ஆபத்துகளையும் கொண்டு வருகிறது.
அந்தவகையில் மழைக்காலத்தில் விஷ ஜந்துக்கள் வீட்டிற்குள் வர நேரிடும். இதனால் பல ஆபத்துக்களும் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே விஷ ஜந்துக்களை வீட்டிற்குள் வர விடாமல் தடுக்கும் சக்தி சில மூலிகை செடிகளுக்கு உள்ளன. அந்த செடிகளை முறையாக வளர்த்தால் விஷ ஜந்துக்களிடம் இருந்து பாதுகாப்பு பெறலாம்.
பிரதானமான செடிகள்
மழைக்காலத்தில் பல்வேறு வகையான விலங்குகள் மற்றும் ஆபத்தான விஷ ஜந்துக்கள் வீட்டிற்குள் நுழையும் அபாயமும் இந்த பருவத்தில் அதிகரிக்கிறது.
அத்தகைய சூழ்நிலையில், முதல் தளம் அல்லது தரை தளத்தில் உள்ளவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
வீட்டைச் சுற்றி ஆறுகள், வாய்க்கால், குளங்கள், பூங்காக்கள் உள்ளவர்களும் விஷ ஜந்துக்கள் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
சாமந்தி செடி
வீட்டில் இருந்து விஷ ஜந்துக்களை விரட்ட சில தாவரங்களின் வாசனை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா. விஷ ஜந்துக்களை விரட்டுவதற்கு பல தாவரங்கள் உள்ளன, அதன் வாசனை அவற்றை ஓட வைக்கிறது.
இந்த தாவரங்களில் வேம்பு, புடலங்காய் மற்றும் சாமந்தி செடி ஆகியவை பிரதானமானவையாக விளங்குகின்றன.
எனவே உங்கள் வீடுகளில் மேற்குறிப்பிட்ட தாவரங்களை வளர்ப்பதன் மூலம் உங்களையும் உங்களைச் சுற்றி இருப்பவர்களையும் பாதுகாக்க முடியும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
