கருமை நிறத்தை போக்க வேண்டுமா...! கிரீம்களுக்கு பதிலாக இதை பயன்படுத்துங்கள்
Skin Care
National Health Service
Beauty
By Independent Writer
பொதுவாக நமது முகம் நன்கு பொலிவுடன் அழகாக இருக்க வேண்டும் என்று பெண்கள் மட்டுமில்லாமல் ஆண்களும் ஆசைப்படுவார்கள்.
தற்போதைய வெப்பமான காலப்பகுதியில் முகம் பொலிவிழந்து கருமையடைந்து காணப்படும். இதற்காக அதிக பணத்தை செலவு செய்து அழகு நிலையங்களில் நேரத்தை பெண்கள் மற்றும் ஆண்கள் செலவு செய்கின்றனர்.
அந்தவகையில் முகத்தின் கருமை நீங்க சில இயற்கையான பயனுள்ள குறிப்புகளை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.
வீட்டில் பயன்படுத்தும் பொருட்கள்
இந்த வீட்டில் பயன்படுத்தும் பொருட்களே போதும், உங்கள் முகம் பளிங்கு போல் மாறிவிடும். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
- சர்க்கரையில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அனைத்தும் நீங்கி, சரும துளைகளில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறி சருமம் பொலிவோடு காணப்படும்.
- தேங்காய் தண்ணீரைக் கொண்டு தினமும் இரண்டு முறை முகத்தை மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து கழுவினால் முகத்தில் உள்ள தழும்புகள், கருமை நீங்கி, முகம் பளிச்சென்று வெள்ளையாகும்.
சூரியக்கதிர்களால் கருமையான சருமம்
- மாம்பழத்தின் தோலை பால் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், சூரியக்கதிர்களால் கருமையான சருமம் வெள்ளையாகி பொலிவோடு மின்னும்.
- தேனில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவினால், முகம் ஆரோக்கியமாகவும், பளிச்சென்றும் காணப்படும். மேலும் இந்த முறையை தொடர்ந்து இரண்டு நாட்கள் செய்து வந்தால், முகத்தின் நிறம் அதிகரித்திருப்பதைக் காணலாம்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்