சிரியாவில் இராணுவ வாகனத்தை தாக்கிய பயங்கரவாதிகள் : 5பேர் உடல் சிதறி பலி
Syria
Soldiers
terrorists
Attacked
Rocket bomb
By Mkkamshan
சிரியாவில் இராணுவ வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் ராக்கெட் குண்டை வீசியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிரியாவின் மத்திய பகுதியில் இருந்து 20 க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் இராணுவ வாகனத்தில் புறப்பட்டனர். அங்குள்ள ஒரு நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் இராணுவ வாகனத்தின் மீது ராக்கெட் குண்டை வீசினர்.
இதில் பேருந்து வெடித்து சிதறியது. இந்த கோர சம்பவத்தில் 5 இராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 15 பேர் பலத்த காயமடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறித்பிடத்தக்கது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி