தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயங்கரம்: 5 வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி கோர விபத்து
Sri Lanka Police
Sri Lanka
Accident
By Shalini Balachandran
கொழும்பில் 5 வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
குறித்த விபத்துச் சம்பவம் இன்று (26-06-2026) இரவு இடம்பெற்றுள்ளது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கலனிகம மற்றும் தொடங்கொட ஆகிய இடங்களுக்கு இடைப்பட்ட 31 ஆவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
அதிவேக நெடுஞ்சாலை
குறித்த விபத்தில் சிக்கி சிலர் காயமடைந்துள்ளதாகத் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மாத்தறை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த இரண்டு பேருந்துகளும் மூன்று கார்களும் ஒன்றோடொன்று மோதியதே இந்த விபத்துக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தினால் குறித்த பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 1 நாள் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
5 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்