முற்றத்தில் விளையாடிய 5 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி
கம்பஹாவில் (Gampaha) வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த மூன்று சிறுவர்கள் மீது கார் மோதியதில் 5 வயது சிறுமி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்துச் சம்பவம் மாபாகே பகுதியில் நேற்று (06.04.2025) இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கம்பஹா மாபாகே காவல்துறை பிரிவுக்குட்பட்ட வெலிசறை ஜேகொப் மாவத்தை பகுதியில் நேற்றையதினம் வேறு வீதியினூடாக வந்த கார் ஒன்று வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த மூன்று சிறுவர்கள் மீது மோதியுள்ளது.
விபத்துச் சம்பவம்
சம்பவத்தில் 3 சிறுவர்களும் படுகாயமடைந்து ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் படுகாயமடைந்த சிறுமி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
வெலிசறை, ராகமை பகுதியை சேர்ந்த 5 வயதுடய சிறுமி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அத்துடன், காயமடைந்த ஏனைய சிறுவர்கள் தொடர்ந்தும் ராகமை வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இந்த விபத்தினை ஏற்படுத்திய கார் சாரதி காரை சம்பவ இடத்திலேயே கைவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
