குளத்தில் வீசப்பட்ட பெருமளவு மருந்து குப்பிகள் மீட்பு : விரைந்து செயற்பட்ட அதிகாரிகள்
அரச முத்திரை பதிக்கப்பட்ட 5,000 மருந்து குப்பிகள் கெக்கிராவ தெலம்பியகம குளத்தில் வீசப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கெக்கிராவ நகருக்கு அருகாமையிலுள்ள தெலம்பியகம குளத்தில் சுகாதார பிரிவினருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் பாதுகாப்பற்ற வகையில் வீசப்பட்டிருந்த 5,000 மருந்து குப்பிகளை சுகாதார பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த மருந்து குப்பிகளில் அரச முத்திரை பொறிக்கப்பட்டுள்ளது என்றும் அவை பயன்படுத்தப்பட்ட நிலையில் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு மணி நேரத்திற்குள்
கைப்பற்றப்பட்டு இரண்டு மணி நேரத்திற்குள் அதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாக கெக்கிராவ பொது சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.
கெக்கிராவ பொது சுகாதார வைத்திய அலுவலகத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய குறித்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது

இதற்கு முன்னரும் குறித்த பிரதேசத்தில் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றிருந்ததாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
