50000 ரூபாய் நிதிமானியம் - மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
அரசாங்கத்தால் நிதி மானியங்கள் வழங்கப்படுவதாக தெரிவித்து பண மோசடி இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழுவின் சிரேஷ்ட பொறியியலாளர் சாருகா தமுனுபொல (Saruka Damunupola) தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், இது குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
50000 ரூபா மானியம்
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “50000 ரூபா மானியம் வழங்குவதாக உறுதியளிக்கும் போலி செய்திகளைப் பெறுவது குறித்து பொதுமக்களிடமிருந்து பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இவ்வாறான செய்திகளில் உள்ள எந்தவொரு இணைப்புகளையும் கிளிக் செய்வதைத் தவிர்க்கவும்.
இந்த இணைப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதையும் தவிர்க்கவும்” என அவர் தெரிவித்துள்ளார்.
இணையவழி மோசடி
அத்தோடு, அண்மையில் இலங்கையில்(sri lanka) இணையவழி மோசடியில் தொடர்புபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட சீன(china) பிரஜைகள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட அவர்களிடமிருந்து கைபேசிகள், மடிக்கணனிகள், மற்றும் ரவுட்டர்கள் என பல இலத்திரனியல் சாதனங்கள் கைப்பற்றப்பட்டன.
மேலும், சிலாபத்தில் ஹோட்டல் ஒன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் தங்கியிருந்த வெளிநாட்டு பிரஜைகள் சிலரும் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |