இலங்கைக்கு ஐம்பதாயிரம் கோடிக்கு மேல் இழப்பு: வெளியான காரணம்
இலங்கையில் தேயிலை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக கடந்த பத்து வருடங்களில் 51,150 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டின் வரலாற்றில் அதிகூடிய தேயிலை உற்பத்தி 2013ஆம் ஆண்டு பதிவாகியுள்ளதாகவும் அது 34,000 மெற்றிக் தொன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தேயிலை உற்பத்தி 2015 இல் 328,800 மெற்றிக் தொன்களாலும், 2020 இல் 278,489 மெற்றிக் தொன்களாலும், 2023 இல் 256,039 மெற்றிக் தொன்களாலும் குறைந்துள்ளதாக பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியம்
அத்துடன் தேயிலை ஏற்றுமதி 2013 இல் 319,700 மெற்றிக் தொன்களாலும் 2015 இல் 306,900 மெற்றிக் தொன்களாலும் 2020 இல் 265,569 மெற்றிக் தொன்களாலும் 2023 இல் 241,912 மெற்றிக் தொன்களாலும் குறைந்துள்ளதாக அத்துகோரள தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தேயிலை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வீழ்ச்சியினால் ஏற்படும் இழப்பு சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தொகையில் 75 வீதத்திற்கு சமம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |