பிரித்தானியாவின் வலையில் சிக்கிய சீன நீர்மூழ்கி கப்பல்: பலியான 55 சீன வீரர்கள்
மஞ்சள் கடலில் பிரித்தானியாவின் துணை மேற்பரப்புக் கப்பல்களை சிக்க வைக்கும் வலையில் சீனாவின் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட சீன நீர்மூழ்கி கப்பல் சிக்கியதில் சீனாவின் 55 வீரர்கள் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
PLA கடற்படை நீர்மூழ்கிக் கப்பல் 093-417 விபத்துக்குள்ளானதில் கேணல் சு யங் பெங் உட்பட வீரர்கள் உயிரிழந்துள்ளதுள்ளதாகவும் இந்த விபத்து கடந்த ஓகஸ்ட் 21ஆம் திகதி நடந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சீனா அதிகாரபூர்வமாக மறுத்துள்ளது
மேலும் இது தொடர்பில் பிரித்தானியா வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஓகஸ்ட் 21 அன்று, உள்ளூர் நேரப்படி 08:12 மணிக்கு, மஞ்சள் கடலில் ஒரு பணியின் போது ஒரு விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், இதன் விளைவாக 22 அதிகாரிகள், 7 அதிகாரி கேடட்கள் மற்றும் 17 sailors உட்பட 55 பணியாளர்கள் உயிரிழந்துள்ளதுடன், இறந்தவர்களில் சீனாவின் கப்டன் கேணல் சூ யோங்-பெங்கும் ஒருவர் என கூறப்பட்டுள்ளது.
அதேவேளை, 093 வகுப்பைச் சேர்ந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் 15 ஆண்டுகளாக சீன இராணுவத்தின் ஒரு பகுதியாக உள்ளன. 351 அடி உயரம் கொண்ட இந்த நீர்மூழ்கி கப்பல், பாரிய கப்பல்களை அழிக்கும் திறன் கொண்டது.
உயிரிழந்தவர்களில் சீன PLA கடற்படை நீர்மூழ்கிக் கப்பலான '093-417' இன் கப்டன் மற்றும் 21 பேர் அடங்குவர் என கூறியுள்ள நிலையில் இந்த சம்பவத்தை சீனா அதிகாரபூர்வமாக மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.