மூன்றாவது உலகப்போருக்கு தயாராகுங்கள்: புடின் அறிவிப்பால் பரபரப்பு
ரஷ்ய மக்களை மூன்றாவது உலகப்போருக்கு தயாராக இருக்குமாறு அந்நாட்டின் அதிபர் புடின் பகிரங்க அறிவித்தல் விடுத்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவில் உக்ரைன் போர் தொடங்கிய பின்னர் சைரன்கள் ஒலிப்பது வழமையாக இருந்து வருகிறது. ஆனால் இன்று வழமைக்கு மாறாக காலை 10.30 மணியளவில் திடீரென நாடளாவிய ரீதியில் ஒலித்தன.
புடின் எச்சரிக்கும் அறிவிப்பு
இவ்வாறு சைரன் ஒலி எழுப்பிய நிலையில் தொலைக்காட்சி மற்றும் வானொலிகளில் மக்களை மூன்றாம் உலகப்போருக்கு தயாராக இருக்குமாறு அதிபர் புடின் எச்சரிக்கும் அறிவிப்பு ஒலிபரப்பப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, ரஷ்ய அவசர சூழல் அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், சைரன்களை ஒலியெழுப்பும்போது மக்கள், திகிலடையக்கூடாது, அமைதியாக இருக்கவேண்டும், தொலைக்காட்சி அல்லது வானொலியை இயங்கு நிலையில் வைத்து அதில் கூறப்படும் தகவலை கவனிக்கவேண்டும்.
புடினின் பிறந்தநாள் பரிசு
அவசர அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில், அதை மக்களுக்கு சரியான நேரத்தில் தெரிவிப்பதற்காகவே இந்த எச்சரிக்கை அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை, இந்த வார இறுதியில் பிறந்தநாள் கொண்டாட இருக்கும் புடின், தனக்குதானே கொடுத்துக்கொள்ளும் பிறந்தநாள் பரிசாக, அணு ஏவுகணை ஒன்றை வீசலாம் என்ற தகவல் வெளியாகி அச்சத்தை மேலும் உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.