பிரித்தானிய வீரர்கள் குறிவைத்து தாக்கப்படுவார்கள்: கடுமையாக எச்சரித்த ரஷ்யா
பிரித்தானியா உக்ரைனுக்கு வீரர்களை அனுப்பினால் பிரித்தானிய வீரர்கள் குறிவைத்து தாக்கப்படுவார்கள் அதற்கான உரிமை ரஷ்யாவிற்கு உள்ளது என ரஷ்யா பிரித்தானியாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
உக்ரைன் வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக பிரித்தானியா வீரர்கள் உக்ரைனுக்கு அனுப்பப்படலாம் என பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் கிராண்ட் ஷாப்ஸ் கூறியிருந்த நிலையிலேயே ரஷ்யா இவ்வாறு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நிறுத்துவதற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் தொடர்ந்து 20 மாதங்களாக நடைபெற்று வருகிறது.
பயிற்சி அளிக்கலாம்
இந்நிலையில் மான்செஸ்டரில் நடைபெற்ற கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆண்டு கூட்டத்தொடரில் செய்தியாளர்களை சந்தித்த பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், பிரித்தானிய வீரர்களை உக்ரைனுக்கு அனுப்ப திட்டம் எதுவும் தற்போதைக்கு இல்லை என தெரிவித்துள்ளார்.
அத்தோடு பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சரின் கூற்று என்றாவது நிறைவேறுவதற்கான வாய்ப்பு உள்ளது என்பதை மட்டும் பிரதிபலிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எதிர்காலத்தில் உக்ரைனிய வீரர்களுக்கு அவர்களது நாட்டில் பிரித்தானிய வீரர்கள் பயிற்சி அளிக்கலாம் எனவும் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.