ஜப்பானில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ...! சுனாமி எச்சரிக்கை: அச்சத்தில் மக்கள்
ஜப்பானின் அமோரி மாகாணத்தின் கிழக்கு கடற்கரையில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கம் இன்று காலை 11:44 மணிக்கு (0244 GMT) அமோரி மாகாணத்தின் கடற்கரையில் 20 கிமீ (12 மைல்) ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
6.7 மெக்னிடியூட் அளவிலான நில அதிர்வு ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
சக்திவாய்ந்த நிலநடுக்கம்
இதனால் 1 மீட்டர் (39 அங்குலம்) உயரம் வரை அலைகள் எழும்பும் என்று ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் (JMA) எச்சரித்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை இரவு அதே பிராந்தியத்தில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் தாக்கிய நிலையில், மீண்டும் சில நாட்களிலேயே அதிர்வு ஏற்பட்டிருப்பது ஜப்பான் மக்களைப் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
திங்கட்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பிறகு, வடக்கே ஹொக்கைடோ முதல் டோக்கியோவின் கிழக்கே உள்ள சிபா வரை பரந்த பகுதியில் வசிக்கும் மக்கள், ஒரு வாரத்திற்குள் மீண்டும் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிப்பதால், எச்சரிக்கையாக இருக்குமாறு அரசாங்கம் ஒரு சிறப்பு ஆலோசனையை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |