ஆயிரம் அடி பள்ளம்: மயிரிழையில் தப்பிய 14 உயிர்கள்...! சாமர்த்தியமாக காப்பாற்றிய சாரதி
பேருந்து ஒன்றின் பிரேக் செயலிழந்த போது, சாரதி பேருந்தை மண் மேட்டில் மோதி நிறுத்தி 14 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
பதுளையிலிருந்து அனுராதபுரம் நோக்கி இன்று (12) காலை பயணித்த கெகிராவ இ.போ.ச சாலைக்குச் சொந்தமான பேருந்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடந்த காலங்களில் இந்த வீதியில் பல கோர விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும், அவை அனைத்திற்கும் பிரேக் கோளாறுகளே காரணம் எனவும் பதுளை காவல்துறையினர் தெரிவித்துள்ளர்.
பாரிய விபத்து
காலை 6.35 மணியளவில் பதுளையிலிருந்து பயணத்தை ஆரம்பித்து பதுளை - மஹியங்கனை வீதி ஊடாக பயணித்துக் கொண்டிருந்த போது, பதுளை துன்ஹிந்த வளைவுக்கு அருகில் பேருந்துன் பிரேக் செயலிழந்ததாகவும், தான் உடனடியாக பேருந்தை மண் மேட்டில் மோதி நிறுத்தியதாகவும் சாரதி தெரிவித்துள்ளார்.

சிறு கீறல் கூட ஏற்படாமல் பயணிகள் அனைவரும் காப்பாற்றப்பட்டதாகவும், அவ்வாறு செய்திருக்காவிடின் பேருந்து ஆயிரம் அடி பள்ளத்தில் கவிழ்ந்து பாரிய விபத்து ஏற்பட்டிருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து கருத்து வெளியிட்ட "நான் பயணிகளிடம் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுமாறு கூறினேன்.
சாரதி மிகச் சரியாகக் கணித்து மண் மேட்டில் பேருந்தை மோதச் செய்து நிறுத்தினார் என பேருந்து நடத்துனர், குறிப்பிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |