அதிகரித்த வெப்பம் : ஹஜ் யாத்திரிகர்கள் அறுவர் சுருண்டு விழுந்து மரணம் : இலங்கையரும் உள்ளனரா..!
சவுதியில்(saudi arabia) அதிகரித்த வெப்பம் காரணமாக ஹஜ் யாத்திரைக்கு சென்றவர்களில் ஆறு பேர் சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு உயிரிழந்த ஆறு பேரும் தமது நாட்டைச்சேர்ந்தவர்கள் என ஜோர்டானிய (jordan)வெளியுறவு அமைச்சு நேற்று (15) சனிக்கிழமை தெரிவித்தது.
சவுதி அதிகாரிகள் எச்சரிக்கை
இந்த ஆண்டு வருடாந்த கூட்டத்தின் போது வெப்பநிலை 48 டிகிரி செல்சியஸை (118 டிகிரி பாரன்ஹீட்) எட்டக்கூடும் என்று சவுதி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
1.8 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்த ஆண்டு ஹஜ்ஜில் பங்கேற்கின்றனர் என்று சவுதி பொது ஆணையம் தெரிவித்துள்ளது.
சவுதி அரேபியாவின் மிகப்பெரிய வருடாந்திர நிகழ்வு
ஹஜ் என்பது உலகின் மிகப்பெரிய மதக் கூட்டங்களில் ஒன்றாகும் மற்றும் சவுதி அரேபியாவின் மிகப்பெரிய வருடாந்திர நிகழ்வு ஆகும். இலங்கையைச்(sri lanka) சேர்ந்த ஹஜ் யாத்திரிகளுக்கு எவ்விதமான பாதிப்பு இல்லையென அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |