இன்று நள்ளிரவுநேரம் வெசாக் தானசாலை மக்கள் மீது மோதியது கார் : ஆறுபேர் பரிதாப மரணம்
Sri Lanka Police Investigation
Accident
Death
Vesak Day
Arrest
By Jaso
மீகொட சந்தி அருகே உள்ள வெசாக் தானசாலையில் கூடியிருந்த மக்கள் மீது வாடகைக் கார் மோதியதில், மூன்று ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் உட்பட ஆறு பேர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
வெசாக் தானசாலை அருகே கூடியிருந்த மக்கள் கூட்டத்தின் மீது வாடகைக் கார் திடீரெனத் திரும்பியதால்,இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆறுபேர் பரிதாப மரணம்
இதன்போது காயமடைந்த 12 பேர் சிகிச்சைக்காக ஹோமகம ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் மூன்று ஆண்களும் மூன்று பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாடகைக் காரின் ஓட்டுநர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இதுகுறித்த மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்