கடந்த வருடம் கடல் மார்க்கமாக இடம்பெயர முயன்ற 6,000-க்கும் அதிகமான பேர் உயிரிழப்பு
கடந்த ஆண்டு மட்டும் ஸ்பெயினுக்கு கடல் வழி மார்க்கமாக வர முயன்றவர்களில் 6,600-க்கும் அதிகமான பேர் உயிரிழந்துள்ளதாக அரசு சார்பற்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
அவ்வகையில், அதற்கு முந்தைய ஆண்டின் எண்ணிக்கையை விட இது இரு மடங்கு அதிகம் எல்லை நடைபாதை அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், முந்தைய ஆண்டில் 2,390 இறப்பு எண்ணிக்கையாக இருந்தது.
இடம்பெயர்பவர்கள் எண்ணிக்கை
புலம்பெயர்ந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் மீட்கப்பட்டவர்களின் தரவுகள்படி இந்த எண்ணிக்கையை அமைப்பு வெளியிட்டுள்ளது, 2007 முதல் இந்த அமைப்பு பதிவுகளை வெளியிட்டு வருகிறது.
அத்துடன், மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்து ஸ்பெயினின் கேனரி தீவுகளுக்கு அட்லாண்டிக் கடல் மார்க்கமாக இடம்பெயர்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கேனரி தீவுகள் மொராக்கோவுக்கு மேற்குப் பகுதியில் உள்ளது.
அதேவேளை, ஸ்பெயின் உள்துறை அமைச்சகம் 55,618 புலம்பெயர்ந்தவர்கள் கடல் வழியாக நாட்டுக்குள் வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |