நிலவும் மோசமான வானிலையால் ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு: இருவர் பலி
நிலவும் மோசமான வானிலை காரணமாக பதின்மூன்று மாவட்டங்களில் இரண்டு இறப்புகள் மற்றும் 17,325 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 67,865 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த தகவலை, பேரிடர் மேலாண்மை மையம் அறிவித்துள்ளது.
அதன்படி, இரத்தினபுரி (Rathnapura), கொழும்பு (Rathnapura), கேகாலை, அனுராதபுரம், கண்டி, காலி, யாழ்ப்பாணம், களுத்துறை, மாத்தறை, புத்தளம், குருநாகல், ஹம்பாந்தோட்டை மற்றும் கம்பஹா ஆகிய பிரதேசங்களில் உள்ளவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்பட்ட சேதம்
மேலும் , 410 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 150 மில்லிமீற்றர் அளவில் மிக பலத்த மழை பெய்யக்கூடுமெனவும் வடமேல் மாகாணத்திலும் மன்னார் (Mannar), காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது .
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |