நிலுவையில் உள்ள 678,000 சாரதி அனுமதிப்பத்திரங்கள் : வெளியான தகவல்

Sri Lanka Sri Lankan Peoples Driving Licence
By Sathangani Oct 03, 2026 10:57 AM GMT
Report

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் வாகனப் பதிவு இலக்கத் தகடுகள் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பில் ஆராய்ந்து 45 நாட்களுக்குள் முழுமையான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு துறைசார் மேற்பார்வைக் குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். எம். மரிக்கார் தலைமையில் அண்மையில் கூடிய உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுக் கூட்டத்திலேயே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

இக்குழுக் கூட்டத்தின் போது, 2026 மார்ச் 10 ஆம் திகதிக்குப் பின்னர் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு 14 நாட்களுக்குள் இலக்கத் தகடுகளை வழங்கும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொழும்பு மாநகர முன்னாள் முதல்வர் ரோசி சேனாநாயக்கவின் மகன் காலமானார்!

கொழும்பு மாநகர முன்னாள் முதல்வர் ரோசி சேனாநாயக்கவின் மகன் காலமானார்!

கூட்டத்தில் கலந்துகொண்டோர்

இதன்போது கருத்துரைத்த அதிகாரிகள், தற்போது அச்சிடுவதற்காக நிலுவையில் உள்ள சாரதி அனுமதிப்பத்திரங்களின் எண்ணிக்கை சுமார் 678,000 ஆகக் காணப்படுகின்றது.

நிலுவையில் உள்ள 678,000 சாரதி அனுமதிப்பத்திரங்கள் : வெளியான தகவல் | 678 000 Driving Licenses Pending Printing

நாளொன்றுக்கு சுமார் 4,600 அனுமதிப்பத்திரங்களை மட்டுமே அச்சிடக்கூடிய நிலை காணப்படுவதால் இந்நிலுவை மேலும் அதிகரித்து வருகின்றது.

இந்நிலுவைக்கு விரைவான தீர்வாக, ஒக்டோபர் 15 ஆம் திகதிக்குள் இரண்டு புதிய அச்சு இயந்திரங்களை நிறுவி, நாளாந்த அச்சிடும் திறனை 8,200 சாரதி அனுமதிப்பத்திரங்கள் வரை உயர்த்த எதிர்பார்க்கின்றோம்” என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

இக்குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான அஜித் பி. பெரேரா, மஞ்சுள சுரவீர ஆராச்சி, சதுர கலப்பத்தி, ரவீந்திர பண்டார, தனுஷ்க ரங்கநாத், அசித நிரோஷண எகொட விதான, ஜகத் விதான, சாந்த பத்ம குமார சுபசிங்க மற்றும் சட்டத்தரணி கீதா ஹேரத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

உக்ரைனின் தலைநகரிலுள்ள மற்றுமொரு பாலம் மீதும் ரஷ்யா தாக்குதல்!

உக்ரைனின் தலைநகரிலுள்ள மற்றுமொரு பாலம் மீதும் ரஷ்யா தாக்குதல்!

பாடசாலை போசாக்குத் திட்டத்திற்காக 33,600 மில்லியன் ருபாய் : பிரதமர் அறிவிப்பு

பாடசாலை போசாக்குத் திட்டத்திற்காக 33,600 மில்லியன் ருபாய் : பிரதமர் அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016