கொழும்பு மாநகர முன்னாள் முதல்வர் ரோசி சேனாநாயக்கவின் மகன் காலமானார்!
கொழும்பு மாநகர சபையின் முன்னாள் முதல்வர் ரோசி சேனாநாயக்கவின் மகனும், கொழும்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற வேட்பாளருமான கனிஷ்க சேனாநாயக்க காலமானார்.
திடீர் உடல்நலக்குறைவு காரணமாக இன்று (03) அதிகாலை அவர் தனது 41ஆவது வயதில் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கனிஷ்க சேனாநாயக்க 2020ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டிருந்தார்.
அரசியல் நடவடிக்கை
இளம் வயதிலேயே அரசியலில் ஈடுபட்ட அவர், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய இரு கட்சிகளுடனும் இணைந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்.

அரசியலுக்கு அப்பால், கனிஷ்க சேனாநாயக்க தனியார் நிறுவனத் துறையிலும் பல்வேறு பொறுப்புகளை வகித்ததுடன், பல நிறுவனங்களின் பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
இந்தநிலையில், கனிஷ்க சேனாநாயக்கவின் மறைவு குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |