எரிபொருள் போக்குவரத்துக் கட்டண விவகாரம் : விநியோகத்தில் சிக்கல் ஏற்படும் அபாயம்

Ceylon Petroleum Corporation Transport Fares In Sri Lanka Petrol diesel price
By Sathangani Oct 03, 2026 03:55 AM GMT
Report

எரிபொருள் போக்குவரத்துக்காக செலுத்தப்படும் கட்டணத்தை 15 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இணக்கம் தெரிவித்துள்ளதாக அகில இலங்கை பெட்ரோலிய தனியார் தாங்கி வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த கட்டணத்தை 20 சதவீதத்தால் அதிகரிக்குமாறு நேற்று (02) நடைபெற்ற கலந்துரையாடலின்போது கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனினும், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் முன்வைத்துள்ள கட்டண அதிகரிப்பு முறைமை தொடர்பில் ஆய்வு செய்வதற்காக எதிர்வரும் 5ஆம் திகதி வரை கால அவகாசம் பெற்றுள்ளதாக அந்த சங்கத்தின் செயலாளர் டி.வி. சாந்த சில்வா தெரிவித்துள்ளார்.

யாழில் பாடசாலைகளுக்கு மத்தியில் மதுபானசாலை - அதிபரின் அதிர வைக்கும் குற்றச்சாட்டு: அதிகாரிகள் தூக்கத்தில்..!

யாழில் பாடசாலைகளுக்கு மத்தியில் மதுபானசாலை - அதிபரின் அதிர வைக்கும் குற்றச்சாட்டு: அதிகாரிகள் தூக்கத்தில்..!

அரசாங்கத்திடம் கோரிக்கை

டீசல், டயர்கள், மின்கலங்கள், பராமரிப்புச் செலவுகள் மற்றும் ஊழியர்களின் வேதனம் உள்ளிட்ட தொழிலை நடத்துவதற்கான செலவுகளைக் கருத்திற்கொண்டு, எரிபொருள் போக்குவரத்துக்கான கட்டணத்தை அதிகரிக்குமாறு தனியார் தாங்கி வாகன உரிமையாளர்கள் அரசாங்கத்திடம் முன்னதாக கோரிக்கை விடுத்திருந்தனர்.

எரிபொருள் போக்குவரத்துக் கட்டண விவகாரம் : விநியோகத்தில் சிக்கல் ஏற்படும் அபாயம் | Increasing Fuel Transport Charges By 15 Percent

அத்துடன், போக்குவரத்துக் கட்டணத்தை நிர்ணயிக்கும் விலைச் சூத்திரத்தையும் அதற்கேற்ப திருத்துமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், எரிபொருள் விநியோகப் பணிகளில் இருந்து விலக நேரிடும் எனவும் தனியார் தாங்கி வாகன உரிமையாளர்கள் முன்னதாக எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இந்தப் பின்னணியிலேயே, தனியார் தாங்கி வாகன உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கும் இடையில் நேற்று இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இறைச்சி மற்றும் முட்டை விலை அதிகரிப்பு - வெளியான தகவல்

இறைச்சி மற்றும் முட்டை விலை அதிகரிப்பு - வெளியான தகவல்

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல்! ஐ.நாவிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோள்

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல்! ஐ.நாவிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016