7,000 கோடி நட்டத்தை நாட்டுக்கு பெற்றுக்கொடுத்துள்ள மத்தள சர்வதேச விமான நிலையம்
190 மில்லியன் அமெரிக்க டொலர் கடனில் நிர்மாணிக்கப்பட்டு, 2013ஆம் ஆண்டு விமானச் சேவைகளை ஆரம்பித்த மத்தள சர்வதேச விமான நிலையம், இதுவரை 70,000 மில்லியன் ரூபாவுக்கும் (7,000 கோடி ரூபா) அதிகமான திரண்ட நட்டத்தைப் பதிவு செய்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை நாடாளுமன்றத்தில் முன்வைத்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
விமான நிலையம் ஆரம்பிக்கப்பட்டது முதல் தொடர்ச்சியாக நட்டத்தைச் சந்தித்து வருவதுடன், இந்த நட்டம் ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
பெண்களைத் தலைமைத்துவத்தை கொண்ட குடும்பங்களுக்கு ரூ.1,250 கோடி நிதியுதவித் திட்டம் - ஜனாதிபதி அறிவிப்பு
புதிய முதலீட்டாளர்கள்
இதனைக் கருத்திற்கொண்டு, மத்தள சர்வதேச விமான நிலையத்தை வருமானம் ஈட்டும் மையமாக மாற்றுவதற்காக சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து செயற்பட அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இதன்படி, விமான நிலையச் செயற்பாடுகள், தரவு மையங்கள், உணவு மற்றும் கேட்டரிங் சேவைகள், விமானச் சேவைகள் மற்றும் பராமரிப்பு ஆகிய நான்கு துறைகளில் முதலீடுகளைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான விருப்பக் கோரிக்கைகள் ஏற்கனவே கோரப்பட்டு நிறைவடைந்துள்ளதுடன், தெரிவு செய்யப்பட்ட நிறுவனங்களிடமிருந்து திட்ட முன்மொழிவுகளைக் கோருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எதிர்வரும் ஆண்டுக்குள் புதிய முதலீட்டாளர்களைத் தெரிவு செய்ய எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |