ஹிஜாப் அணியாமல் பாடிய ஈரானிய பாடகிக்கு விதிக்கப்பட்டது 74 கசையடி
பொது ஒழுக்கத்தை மீறும் உள்ளடக்கத்தைத் தயாரித்து வெளியிட்டதற்காக, ஈரானியப் பாடகி பரஸ்தூ அஹ்மதி மற்றும் அவரது தயாரிப்புக் குழுவின் நான்கு உறுப்பினர்களுக்கு தலா 74 கசையடிகள் என ஈரானிய நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.
அந்தக் குழுவினர் இரண்டு ஆண்டுகளுக்கு கலை மற்றும் இசை விழாக்களில் பங்கேற்கத் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், பயணம் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் வழக்கறிஞர் முஸ்தபா நீலி கூறினார்.
ஹிஜாப் அணியாமல், ஆண் இசைக்கலைஞர்கள் குழுவுடன் பாடல்
இந்த வழக்கு, டிசம்பர் 2024-ல் யூடிபில் பதிவேற்றப்பட்ட ஒரு காணொளியை அடிப்படையாகக் கொண்டது. அந்தக் காணொளியில், பரஸ்தூ அஹ்மதி கட்டாய ஹிஜாப் அணியாமல், ஆண் இசைக்கலைஞர்கள் குழுவுடன் ஒரு பாடலைப் பாடியிருந்தார்.
🚨🚨🚨 Les autorités iraniennes ont infligé lundi 74 coups de fouet à la chanteuse de 29 ans Parastoo Ahmadi, qui s'était produite sans voile dans une vidéo diffusée sur YouTube, a rapporté l'agence de presse Isna, citant son avocat. https://t.co/LxnrMmrZNX
— L'Orient-Le Jour (@LOrientLeJour) November 23, 2026
ஈரானியச் சட்டத்தின்படி, பெண்கள் பொது இடங்களில் ஹிஜாப் அணிய வேண்டும், அந்தச் சட்டத்தை மீறுவதற்கே இந்தத் தண்டனை வழங்கப்படுகிறது.
இருப்பினும், மேற்கத்திய நாடுகளும் மனித உரிமை அமைப்புகளும் இந்த நடைமுறையை சித்திரவதை எனக் கருதி கண்டித்துள்ளன, மேலும் ஈரான் அந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |