விருப்ப ஓய்வுபெறும் மின்சார சபை ஊழியர்களுக்கு விசேட இழப்பீடு
விருப்ப ஓய்வுத் திட்டத்தின் கீழ் ஓய்வுபெறும் 1,898 மின்சார சபை ஊழியர்களுக்கு 8.5 பில்லியன் ரூபா நிதி இழப்பீடு வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மின்சார சபையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் மறுசீரமைப்புச் செயற்பாடுகளின் ஒரு பகுதியாக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இது குறித்து வலுசக்தி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பில், மின்சார சபையில் நீண்டகாலம் பணியாற்றி, விருப்ப ஓய்வுத் திட்டத்தைத் தேர்ந்தெடுத்த ஊழியர்களைக் கௌரவிக்கும் வகையில் இந்த விசேட இழப்பீட்டுத் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஊழியர்களை அங்கீகரித்தல்
நிறுவனத்திற்குப் பல வருடங்களாகத் தங்களின் சிறந்த சேவையை வழங்கிய ஊழியர்களை அங்கீகரிப்பதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

அதன்படி, பெருமைமிகு சேவை - பாதுகாப்பான முடிவு (A Proud Service - A Safe End) என்ற கருப்பொருளின் கீழ் நாளை (15) இதற்கான விசேட நிகழ்ச்சி நடைபெறவுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |