இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்கள்!
இலங்கையில் இதுவரை 82,011 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது.
அத்துடன் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிகளவான நோயாளர்கள் மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கம்பஹாவில் அதிகளவு நோயாளர்கள்
இந்த நிலையில் கம்பஹா மாவட்டத்தில் மாத்திரம் ஆண்டின் இதுவரையில் 17,395 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் கொழும்பு மாவட்டத்தில் 16,294 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இதுதவிர ஏனைய மாவட்டங்களான மாத்தறையில் 5,639 பேரும், கண்டியில் 5,634 பேரும், களுத்துறையில் 5,355 பேரும் இரத்தினபுரியில் 4,553 பேரும், காலியில் 4,534 பேரும் டெங்கு நோயினால் அதிகளவில் இனங்காணப்பட்டுள்ளனர்.
2026 ஆம் ஆண்டில் ஜூலை மாதத்தின் முதல் 26 நாட்களில் மாத்திரம் 26,636 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |