85,000 பேர் தொடர்பி்ல வெளியான முக்கிய செய்தி! யாழ்ப்பாணத்திலேயே அதிகம் என தகவல்
vaccine
corona
jaffna
people
By Shalini
அறுபது வயதுக்கு மேற்பட்ட சுமார் 85,000 பேருக்கு இதுவரை கொவிட் தடுப்பூசி செலுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
அவர்களில் பெரும்பாலானோர் யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவர்.
அங்கு தடுப்பூசி பெற்றுக் கொள்ளாத 60 வயதுக்கும் மேற்பட்ட 20 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் உள்ளனர்.
ஏனைய மாவட்டங்களில் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாத அறுபது வயதுக்கும் மேற்பட்டவர்களில் தலா 3 ஆயிரம் பேர் உள்ளனர்.
தடுப்பூசி தொடர்பில் சமூகத்தில் காணப்படும் தவறான கருத்துக்கள், சமூக ஊடகங்களில் பரவும் போலி வதந்திகள் போன்றவை இதற்கு முக்கியமான காரணங்களாகவும் உள்ளன.