பொதுத் தேர்தலுக்கு கட்டுப்பணம் செலுத்தியுள்ள மொத்த சுயேட்சை குழுக்கள்
நாட்டில் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலுக்காக இதுவரையில் மொத்தமாக 86 சுயேட்சை குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு (Election Commission of Sri Lanka) தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டத்தில் மாத்திரம் இதுவரையில் 28 சுயேச்சை குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக அறிவிக்கட்டுள்ளது.
இந்த நிலையில், இலங்கை நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பான ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) கையொப்பத்துடனான வர்த்தமானி செப்டம்பர் 25 ஆம் திகதி வெளியானது.
தேர்தலுக்கு கட்டுப்பணம்
அதன் போது, எதிர்வரும் நவம்பர் மாதம் 14 பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளதாகவும், நவம்பர் மாதம் 21ஆம் திகதி புதிய நாடாளுமன்ற அமர்வு கூடவுள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியிருந்தது.
மேலும், ஒக்டோபர் நான்காம் திகதி முதல் 11 ஆம் திகதி நண்பகல் வரையில் பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |