ஜனாதிபதியிற்கு வாழ்த்து தெரிவித்தார் மூன்றாம் சார்ள்ஸ் மன்னர்
இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அநுரகுமார திஸாநாயக்கவிற்கு (Anurakumara Dissanayake) பிரித்தானியாவின் (Britain) மன்னர் மூன்றாம் சார்ள்ஸ் (Charles III) தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பெட்ரிக்கினால் (Andrew Petrick) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கையளிக்கப்பட்ட கடிதத்தில் சார்ள்ஸ் மன்னர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அந்த கடித்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இந்த முக்கியமான தருணத்தில் இலங்கைக்கு வழிகாட்டுவதில் சாத்தியமான அனைத்து வெற்றிகளையும் வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.
நெருங்கிய உறவு
புதிய ஜனாதிபதியின் கீழ் இங்கிலாந்துக்கும் மற்றும் இலங்கைக்கும் இடையில் ஏற்கனவே உள்ள நெருங்கிய உறவு மேலும் ஆழமடைவதை காண்போம் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
During his meeting with President @anuradisanayake yesterday, British High Commissioner @AndrewPtkFCDO handed over a letter of congratulations from His Majesty The King. https://t.co/iodwJUVHpi pic.twitter.com/x0BkQ3Znht
— UK in Sri Lanka ???? (@UKinSriLanka) October 3, 2024
C.O.P.29 மாநாடு நெருங்கி வருவதால், நமது சமுத்திரங்களைப் பாதுகாக்கவும், பல்லுயிர்களைப் பாதுகாக்கவும், காலநிலை அபாயங்களைச் சமாளிக்கவும், நமது நாடுகள் கூட்டாளிகளாகவும் மற்றும் நவீன காமன்வெல்த் உறுப்பினர்களாகவும் இணைந்து செயல்பட முடியும் என்று நம்புகிறேன் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |