இலங்கையில் பாகிஸ்தான் பிரஜைகள் 9 பேருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
பாரியளவில் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டின் பேரில் கடந்த 2020 ஆம் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் (Pakistan) பிரஜைகள் 9 பேருக்கு 10 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கானது கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது
இதனையடுத்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்தே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சிறைத்தண்டனை
இந்நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி 01ஆம் திகதியன்று காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரும் இலங்கை கடற்படையினரும் இணைந்து நடத்திய சோதனையில், 581 கிலோ 34 கிராம் சந்தேகத்திற்குரிய போதைப்பொருள் மற்றும் 614 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருட்களை வைத்திருந்த பத்து பாகிஸ்தானிய நாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, தண்டனையை அனுபவிக்கும் குற்றவாளிகளை பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |