முல்லைத்தீவில் விபத்தில் சிக்கி 9 வயது சிறுமி பரிதாப மரணம்
Mullaitivu
Sri Lanka Police Investigation
Northern Province of Sri Lanka
By Laksi
முல்லைத்தீவு (Mullaitivu) - முள்ளியவளை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து இன்று (03) மாலை முள்ளியவளை தண்ணீரூற்று நெடுங்கேணி வீதியின் மாமூலைப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, பட்டா ரக வாகனம் ஒன்றுடன் மோதியதில் 9 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.
சாரதி கைது
உயிரிழந்த சிறுமியின் சடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது்.

இந்தநிலையில், வாகனத்தினை செலுத்திய சாரதி முள்ளியவளை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், விபத்து தொடர்பில் முள்ளியவளை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி