இன்று சேவையிலிருந்து விலகிய 90 சதவீத தனியார் பேருந்துகள்
நாட்டின் தனியார் பேருந்துகளில் இன்று (22) சுமார் 90 சதவீதமானவை சேவையிலிருந்து விலகியுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் நேற்று (21) அதிக அளவில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
இதன் காரணமாகவே இன்றைய தினம் பேருந்துகளை இயக்காதிருக்க பேருந்து உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
பேருந்து கட்டண திருத்தம்
புதிய பேருந்து கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட்ட பின்னரே பேருந்து சேவைகளை மீண்டும் முன்னெடுக்க எதிர்பார்ப்பதாகவும் கெமுனு விஜேரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய டீசல் விலை உயர்வைத் தொடர்ந்து பேருந்துக் கட்டணங்கள் குறைந்தபட்சம் 15 சதவீதம் உயரும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் (LPBOA) தெரிவித்துள்ளது.
குறைந்தபட்ச பேருந்துக் கட்டணம் திருத்தியமைக்கப்படும் என்றும், குறைந்தபட்ச மற்றும் நெடுந்தூரப் பயணங்களுக்கான புதிய கட்டணங்கள் இன்று அறிவிக்கப்படும் என்றும் அந்த சங்கத்தின் தலைவர் கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |