சந்திரிகாவிற்கு கிடைக்கவுள்ள உயர் பதவி
                                    
                    Srilanka Freedom Party
                
                                                
                    Chandrika Kumaratunga
                
                                                
                    Maithripala Sirisena
                
                        
        
            
                
                By Sumithiran
            
            
                
                
            
        
    முன்னாள் அதிபர் சந்திரிக்கா குமாரதுங்கவுக்கு சிறி லங்கா சுதந்திரக் கட்சியில் உயர் பதவி வழங்குவது தொடர்பில் தற்போது கட்சிக்குள் கலந்துரையாடப்பட்டு வருவதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது கட்சியின் தலைவர் பதவியை வகிக்கும் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவிற்கு மேலதிகமாக, திருமதி சந்திரிகா குமாரதுங்கவிற்கு உயர் பதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
சந்திரிகா குமாரதுங்கவிற்கு அறிவிப்பு
இது குறித்து சந்திரிகா குமாரதுங்கவிற்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கட்சியின் அரசியலமைப்பு மாற்றப்பட்டு
இது தொடர்பான பதவியை திருமதி குமாரதுங்கவுக்கு வழங்கும் வகையில் கட்சியின் அரசியலமைப்பு மாற்றப்பட்டு, கட்சியின் மத்திய குழுவில் முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட உள்ளன.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்  | 
    
                                
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்