பல்கலைக்கழகத்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளல் : ஜனவரி முதல் ஆரம்பம்
2022/2023 கல்வியாண்டிற்காக பல்கலைக்கழகங்களில் மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை அடுத்த மாதம் முதல் ஆரம்பமாகும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி முதற்கட்டமாக 42 ஆயிரத்து 145 மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.
இம்முறை கலைப்பீடத்திற்கு அதிகளவான மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும், 11 ஆயிரத்து 780 ஆக அந்த எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுமதிக்கான விண்ணப்பங்கள்
இதேவேளை பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பிரதி செயலாளர் ஷாலிகா ஆரியரத்ன தெரிவித்தார்.
பல்கலைக்கழக அனுமதிக்கான எதிர்வரும் 02 வாரங்களுக்குள் பதிவு நடவடிக்கைகளை ஆரம்பிப்பதாகவும், மாணவர்களின் தொலைபேசி இலக்கங்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி, அதனூடாக தேவையான ஆலோசனைகளை வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
2022 கல்வி பொது தராதர உயர் தர பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைவாக, பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான வெட்டுப்புள்ளிகள் கடந்த முதலாம் திகதி வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |