இஸ்ரேல் விமானத்தாக்குதல் : பாலஸ்தீன பிரபல விஞ்ஞானி குடும்பத்துடன் பலி
இஸ்ரேல் விமானப்படை நேற்று சனிக்கிழமை நடத்திய விமானத்தாக்குதலில் காசாவின் பிரபல விஞ்ஞானி அவரது குடும்பத்துடன் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீனிய உயர்கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பேராசிரியர் சுஃபியான் தாயே மற்றும் அவரது முழு குடும்பமுமே விமானத்தாக்குதலில் உயிரிழந்தனர்.
பாலஸ்தீனிய விஞ்ஞானி : இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் தலைவர்
பேராசிரியர் தாயே ஒரு முக்கிய பாலஸ்தீனிய விஞ்ஞானி மற்றும் முன்னணி கல்வி நிறுவனமான காசா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் தலைவராக இருந்தார்.
Heute wurde einer der renommiertesten Astrophysiker der Welt, Professor Sufian Tayeh, gemeinsam mit seiner Familie bei der Bombardierung Jabalias durch israelische Bomben getötet.
— Jules El-Khatib (@ju_khatib) December 2, 2023
Er war nicht nur ein renomierter Physiker, sondern auch Leiter der größten Uni Gazas. pic.twitter.com/D2P0fAkMGO
ஒக்டோபர் 7க்குப் பிறகு இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்ட முதல் கல்வியாளர் பாலஸ்தீனிய விஞ்ஞானி அல்ல. எவ்வாறாயினும், அவரது கொலை, பிராந்தியம் முழுவதும் உள்ள கல்வி சமுகத்தின் மத்தியில் அதிர்ச்சி அலைகளை எழுப்பியுள்ளது.
திறமையான விஞ்ஞானி மற்றும் அன்பான குடும்ப மனிதன் இயற்பியல் மற்றும் பயன்பாட்டு கணிதத்தில் ஒரு முன்னணி ஆராய்ச்சியாளராக இருந்ததாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிறந்த ஆராய்ச்சியாளர்களில்
2021 ஆம் ஆண்டில், குட்ஸ் நியூஸ் நெட்வேர்க்கின் படி, அவர் உலகின் சிறந்த ஆராய்ச்சியாளர்களில் இரண்டு சதவீதத்தில் ஒருவராக வகைப்படுத்தப்பட்டார்.
Dr Sufian Tayeh, the Chairman of the Islamic University in #Gaza, has just been killed along with his entire family in an Israeli airstrike on a residential building in Jabalia, in the northern Gaza Strip. pic.twitter.com/DCYfDtBjbM
— Maha Hussaini (@MahaGaza) December 2, 2023
உண்மையில், தயேயின் ஆராய்ச்சி ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ) உட்பட சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |