வெடுக்குநாறிமலைக்கு சென்ற பௌத்த பிக்கு தலைமையிலான குழு : குவிக்கப்பட்டுள்ள காவல்துறை
வவுனியா - வெடுக்குநாறிமலைக்கு பௌத்த பிக்கு தலைமையிலான குழு சென்றுள்ள நிலையில் அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், ஆலயத்திற்கு செல்லும் சைவ பக்தர்களுக்கு காவல்துறையினர் இடையூறை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து மேலும் தெரியவருகையில், இன்று (12) காலை அப்பகுதிக்கு பௌத்த பிக்கு தலைமையிலான குழுவினர் விசேட பூஜை வழிபாடுகளை மேற்கொள்வதற்காகச் சென்றிருந்தனர்.
காவல்துறையினர் இடையூறு
அதேநேரம் அப்பகுதியில் சைவ மக்களும் வழிபாடுகளுக்குத் சென்றிருந்த நிலையில் அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் ஆலயத்திற்குச் செல்கின்ற சைவ மக்களுடைய வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள் காவல்துறையினரால் மறிக்கப்பட்டு வருவதுடன், அவர்களை நீண்ட தூரத்திற்கு நடந்து செல்லவே அனுமதிப்பதாகக் கூறப்படுகிறது.
பலர் ஆலயத்திற்குச் செல்ல அச்ச நிலையில் வீதியோரங்களில் காத்திருப்பதையும் அவதானிக்கக் கூடியதாக இருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்தநிலையில் தமிழ் தேசிய பேரவையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி ந. காண்டீபன், வவுனியா வடக்கு பிரதைச சபை உப தவிசாளர் வி. சஞ்சுதன் உள்ளிட்டவர்களும் ஆலயத்திற்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |