சாரதியின் நித்திரையால் ஏற்பட்ட விபரீதம் - பாறையில் மோதி விபத்து (படங்கள்)
Southern Province
Accident
Kataragama Temple Sri Lanka
By Dharu
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் யாத்ரீகர்கள் குழுவை ஏற்றிச் சென்றபேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பத்தேகம மற்றும் பின்னதுவ இடையே 88 ஆவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த பேருந்து கதிர்காமத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த போதே விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாறையில் மோதி விபத்து
குறித்த விபத்தில் பேருந்தின் சாரதி காயமடைந்துள்ளதாகவும், வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
சாரதியின் நித்திரையால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
மேலும் குறித்த பேருந்து வீதியை விட்டு விலகி சுமார் 100 மீற்றர் தூரம் பயணித்து பாறையில் மோதியுள்ளதாக முதல்கட்ட விசாரணைகளின் முலம் தெரிவிக்கப்படுகின்றது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
3 நாட்கள் முன்
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்