ஒத்திவைக்கப்பட்டது தமிழரசுக்கட்சியின் அரசியல் உயர்பீட கூட்டம்
Sri Lankan Tamils
TNA
M A Sumanthiran
ITAK
By Shadhu Shanker
தமிழரசுக்கட்சிக்கு எதிராக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஒழுங்கமைக்கப்பட்ட தமிழரசுக்கட்சியின் அரசியல் உயர்பீட கூட்டம் பிற்போடப்பட்டுள்ளது.
வவுனியாவில் உள்ள தாயகம் அலுவலகத்தில் இன்று (28)குறித்த கூட்டம் இடம்பெற இருந்த நிலையிலேயே திகதியிடப்படாமல் பிற்போடப்பட்டுள்ளதாக கட்சியின் முக்கியஸ்தரொருவர் தெரிவித்துள்ளார்.
தமிழரசுக்கட்சியின் அரசியல் உயர்பீட கூட்டம்
கட்சியின் முக்கியஸ்தரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரனின் தாயார் மரணமடைந்தமையாலேயே இக்கூட்டம் பிற்போடப்பட்டுள்ளது.
எனினும் அரசியல் உயர்பீடம் சூம்(zoom) தொழில்நுட்பம் ஊடாக கலந்துரையாடயிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்