சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வே அவசியம்: வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு வலியுறுத்து

Sri Lankan Peoples Northern Province of Sri Lanka
By Dilakshan Aug 02, 2024 01:34 AM GMT
Report

வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களாகிய நாம் இன்று எதிர்கொண்டு வரும் அரச இனவாத அடக்கு முறையில் இருந்து மீண்டு கௌரவமான உரிமைகளை அனுபவிக்கும் பிரஜைகளாக வாழ வேண்டுமாயின் நிலையான சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வே அவசியம் என வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் வடமாகாண இணைப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தெரிவித்துள்ளார்.

அரசியல் தீர்வுக்கான 100 நாட்கள் செயல் முனைவின் இரண்டாம் வருடத்தையொட்டி ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப் பெறமுடியாத சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வு குறித்து யாழ்ப்பாணத்தில் வைத்து நேற்றைய தினம் (1) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களுக்கு நிலையான, கௌரவமான, உரிமைகளுடன் கூடிய நிலையான அரசியல் தீர்வு கோரி 2022 ஆம் ஆண்டு ஆவணி முதலாம் திகதி, சுழற்சி முறையிலான 100 நாட்கள் செயல் முனைவினை ஆரம்பித்து, 2022 கார்த்திகை எட்டாம் திகதி சமஷ்டி தீர்வுக்கான மக்கள் பிரகடனத்தை வெளியிட்டோம்.

மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க: வெளிவரும் அரசியல் வட்டார தகவல்கள்

மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க: வெளிவரும் அரசியல் வட்டார தகவல்கள்


அரசியல் தீர்வுகள்

இன்று வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களான நாம் எதிர்கொண்டு வரும் அரச இனவாத அடக்குமுறையில் இருந்து மீண்டு கௌரவமான, உரிமைகளை அனுபவிக்கும் பிரஜைகளாக வாழ வேண்டுமாயின் நிலையான அரசியல் தீர்வு அவசியம். ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப் பெற முடியாத சமஸ்டி முறையிலான தீர்வு ஒன்றையே நாம் திடமாக வலியுறுத்தி நிற்கிறோம்.

சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வே அவசியம்: வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு வலியுறுத்து | A Communal Political Solution Is Essential

இலங்கையில் நாம் சிறுபான்மையினர் அல்ல. இலங்கையின் வடக்கு கிழக்கு பிராந்தியத்தில் எமக்கான சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடைய இறைமையுள்ள மக்கள் சமூகத்தினராவோம். எமது சுயநிர்ணய உரிமை, இறைமை என்பதை சமஸ்டி முறைமையின் மூலம் உறுதி செய்துகொள்ள திடசங்கற்பம் கொண்டுள்ளோம்.

இதுவரை காலமும் ஆட்சிக்கு வந்த சிங்கள அரசியல் தலைமைகள் அரசியல் தீர்வுகள் பற்றி வாயளவில் கதைத்து தமிழ் மக்களை ஏமாற்றி வந்துவிட்டனர். எவ்வளவு காலத்துக்கு எமது வருங்கால சந்ததியினரும் இந்த அடக்கு முறைகளையும் ஏமாற்றங்களையும் அனுபவிக்கப் போகின்றனர்.

பகிரங்கமான கோரிக்கை

எமது தலைமுறையுடன் துன்பங்களை முடிவுக்குக் கொண்டுவர ஒரு மக்கள் சமூகமாக ஒருங்கிணைந்து செயல்படுவோம். அதற்காக, அனைவரும் ஜனநாயக வழி நின்று செயல்படும் ஒரு சமூக இயக்கமாக பரிணமிக்க வேண்டும்.

சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வே அவசியம்: வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு வலியுறுத்து | A Communal Political Solution Is Essential

சிங்கள அரசியல் தலைமைகளுக்கு நாம் பகிரங்கமான கோரிக்கையை முன்வைக்கிறோம். ஜனாதிபதி தேர்தலில் போட்டி இடப்போகும் வேட்பாளர்கள் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வாக சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டும். சமஸ்டி கொள்கையை முன்னெடுக்கும் நபரே இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக வரவேண்டும்.

தமிழ் பேசும் மக்களான எமது மொழி, மத, அரசியல், பொருளாதார உரிமைகளை பாதுகாத்து முன்னெடுக்கும், இனவாதத்தை எதிர்க்கும் வேட்பாளருக்கே தமிழ் (வடக்கு கிழக்கு), முஸ்லிம், மலையகத் தமிழ் மக்கள் வாக்களிப்போம். சமஷ்டி தீர்வு”என்றார்.

மொட்டுக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் இளைஞர்கள்: நம்பிக்கை வெளியிட்ட நாமல்

மொட்டுக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் இளைஞர்கள்: நம்பிக்கை வெளியிட்ட நாமல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


நல்லூர் கந்தசுவாமி கோவில் 4ஆம் நாள் மாலை திருவிழா

ReeCha
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Paris, France

25 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 6ம் வட்டாரம், Ajax, Canada

30 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு, Niederkrüchten, Germany

01 Aug, 2024
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காரைநகர்

27 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், வவுனியா, Scarborough, Canada

01 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்

காரைநகர், North Carolina, United States

23 Jul, 2025
மரண அறிவித்தல்

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024