நாமலுக்கு எதிரான முறைப்பாடு விசாரணை ஒத்திவைப்பு!
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மற்றும் சிலர் மீது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டை பெப்ரவரி 15ஆம் திகதி மீளப்பெறுமாறு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த தீர்ப்பானது, இன்று (14) நீதிமன்றினால் உத்தரவிடப்பட்டுள்ளது.
நாமல் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சட்டவிரோதமாக சம்பாதித்த 15 மில்லியன் ரூபாவை தனியார் நிறுவனமொன்றில் முதலீடு செய்து பண மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வு திணைக்களம்
இந்நிலையில், இந்த முறைப்பாடு இன்று கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மேலும், இந்த விசாரணை தொடர்பான சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.
அதன்படி, சம்பந்தப்பட்ட முறைப்பாட்டை பெப்ரவரி 15ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உத்தரவிட்ட நீதவான், அன்றைய தினம் விசாரணைகளின் முன்னேற்றத்தை தெரிவிக்குமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.
