மருத்துவரின் கணவர் மர்மமான முறையில் மரணம்
Sri Lanka Police Investigation
Death
By Sumithiran
மட்டக்களப்பு வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியரின் கணவரான பொறியியலாளர் இன்று பிற்பகல் வீட்டில் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஜயலியாகம சியம்பலாகொடவில் வசித்து வந்த புஷ்பகுமார நிஷங்க என்ற 58 வயதுடைய பொறியியலாளரே உயிரிழந்தவராவார்.
வீட்டில் தனியாக இருந்த பொறியியலாளர்
பொறியியலாளர் மட்டும் வீட்டில் தனியாக இருந்ததாகவும் அவரது மனைவி மட்டக்களப்பில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் பணிபுரிந்து வருவதாகவும் காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பொறியாளர் மரணம் கொலையா? தற்கொலையா? இல்லையெனில் சாதாரண மரணமா? என பல கோணங்களில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி