முல்லைத்தீவு கடலில் குளிக்கச் சென்றவருக்கு நேர்ந்த அவலம்
முல்லைத்தீவு - மாத்தளன் கடலில் குளித்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் நீரில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.
நேற்று (28) மாலை மாத்தளன் கடலில் குளிக்க சென்ற 33 அகவையுடைய 10ஆம் வட்டாரம் புதுக்குடியிருப்பினை சேர்ந்த இராசதுரை கஸ்தூரன் என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளார்.
குடும்பத்தினருடன் கடலில் குளித்துக்கொண்டிருந்த வேளை இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடலில் குளித்த நிலையில்
குடும்பமாக ஆண், பெண்கள் என சுமார் 15 பேர் வரையில் வாகனத்தில் வந்து குறித்த கடலில் குளித்துள்ளதை கடற்கரையில் உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கண்டுள்ளனர்.
இதேவேளை குறித்த கடற்கரை பகுதியில் குளிக்க வேண்டாம் என்று அவர்களுக்க அறிவிவுறுத்தப்பட்டுள்ளதாக வாடியில் இருந்த கடற்றொழிலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனினும் அவர் சொன்னதையும் பொருட்படுத்தாது கடலில் இறங்கி ஆண்கள் குளித்துள்ளார்கள்.
காணாமல் போயிருந்தார்
இதன்போதே ஒருவர் கரையில் இருந்து சற்று தொலைவில் சென்ற நிலையில் அவர் காணாமல் போன நிலையில் அவரைக் காணவில்லை என கரையில் இருந்த அவரின் உறவினர்கள் கதறி அழுதுள்ளனர்.
இந்த சம்பவத்தினைத் தொடர்ந்து அவர்கள் அங்கும் இங்கும் தேடினார்கள் ஆனால் கடற்றொழிலாளர்களின் படகு கூட கடலில் இறக்க முடியாத நிலையில் கடல் அடி காணப்படுகின்றது.
முல்லைத்தீவு கடல் ஒரு ஆபத்தான கடல் எனவும், குறிப்பாக மாத்தளன் பகுதியில் இவ்வாறு காணாமல் போனவரின் உடலம் நாளையதினம் அல்லது நாளை மறுதினம் எங்கோ ஒரு கடற்கரை பகுதியில் ஒதுங்கும் அப்போதுதான் உடலத்தினை மீட்கலாம் என கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |