காலியின் அபிவிருத்தியை துரிதப்படுத்துவதற்கு விசேட ஆணைக்குழு நியமனம்

Galle Ranil Wickremesinghe Sri Lanka
By Sathangani Jan 29, 2024 02:40 AM GMT
Report

காலி மாவட்டத்தின் அபிவிருத்தியை துரிதப்படுத்துவதற்காக விசேட ஆணைக்குழுவொன்றை நியமிக்க அதிபர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.

காலி அபிவிருத்தி தொடர்பில் ஆராய்வதற்காக நேற்று (27) கண்காணிப்பு விஜயத்தில் ஈடுபட்ட அதிபர் ரணில் விக்ரமசிங்க, காலி நகரம் மற்றும் காலி கோட்டை பிரதேசங்களுக்கு விஜயம் செய்து அபிவிருத்தி நடவடிக்கைகளை பார்வையிட்டார்.

காலி கோட்டையில் அமைந்துள்ள அரச நிறுவனங்களையும் காரியாலயங்களையும், காலி கோட்டைக்கு வெளியே கொண்டு வருவதற்கான செயற்பாடுகள் மந்தகதியில் இடம்பெற்று வருவது தொடர்பிலும் கவனம் செலுத்திய அதிபர், அபிவிருத்தி பணிகளை துரிதப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார்.

சுற்றுலாத்துறையை ஊக்குவித்தல் 

காலி நகரத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் நகர அபிவிருத்தி அதிகார சபை, தொல்பொருள் திணைக்களம் மற்றும் ஏனைய அனைத்து நிறுவனங்களும் ஒரே நிறுவனக் கட்டமைப்பின் கீழ் செயற்பட வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய அதிபர், இப்பகுதி சுற்றுலாத்துறை ஊக்குவிப்பிற்கான திட்டங்களை துரிதப்படுத்துவதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

காலியின் அபிவிருத்தியை துரிதப்படுத்துவதற்கு விசேட ஆணைக்குழு நியமனம் | Special Commission For Galle Development Ranil

காலி கோட்டைக்கு விஜயம் செய்த அதிபர், அங்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டு அவர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்தார்.

அருகில் உள்ள கடைக்கு சென்று கடை உரிமையாளர்களுடன் கலந்துரையாடிய அதிபர், காலி கோட்டையின் அபிவிருத்தி தொடர்பில் அவர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்தார்.

இதேவேளை, காலி கோட்டையை அண்மித்த பகுதியில் நேற்று (27) நடைபெற்ற 2024 காலி இலக்கிய விழாவில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவும் கலந்துகொண்டார்.

இஸ்ரேல் போர் தொடர்பில் உலக நாடுகளின் நிலைப்பாடு: ஐநா கடும் கண்டனம்

இஸ்ரேல் போர் தொடர்பில் உலக நாடுகளின் நிலைப்பாடு: ஐநா கடும் கண்டனம்

இலக்கிய விழாவில் கலந்து கொண்டார் 

உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், ஊடகவியலாளர்கள், வெளியீட்டாளர்கள் ஒன்றிணையும் சர்வதேச இலக்கிய விழாவான காலி இலக்கிய விழா பல வருடங்களுக்குப் பின்னர் இவ்வருடம் மீண்டும் நடைபெறுவது விசேட அம்சமாகும்.

காலியின் அபிவிருத்தியை துரிதப்படுத்துவதற்கு விசேட ஆணைக்குழு நியமனம் | Special Commission For Galle Development Ranil

இரண்டாவது நாளான நேற்று (27), செயலமர்வுகள், கலந்துரையாடல்கள், விரிவுரைகள் உள்ளிட்ட பல செயற்பாடுகள் இடம்பெற்றதுடன், இதில் கலந்துகொண்ட அதிபர் ரணில் விக்ரமசிங்க, இலக்கியவாதிகளுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

அதனைத் தொடர்ந்து அங்குள்ள புத்தகக் கூடங்களுக்கு சென்றஅதிபர்  புத்தகங்களைப் பார்வையிட்டார். சர்வதேச கலை, இலக்கிய அனுபவங்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்கும் இலங்கையின் இலக்கியத் துறையை உலகிற்கு எடுத்துச் செல்வதற்கும் சிறந்த வாய்ப்பை வழங்கும் காலி இலக்கிய விழா காரணமாக ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தற்பொழுது காலி மற்றும் கொக்கல பகுதிகளுக்கு வருகை தந்துள்ளனர்.

ஜனவரி 25ஆம் திகதி ஆரம்பமான காலி இலக்கிய விழா நேற்றுடன் 28) நிறைவடைந்தது. அமைச்சர்களான ரமேஷ் பத்திரன, மனுஷ நாணயக்கார மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன ஆகியோரும் இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.  

கடத்தப்பட்ட இலங்கை கப்பலை மீட்க களமிறங்கவுள்ள இந்தியா

கடத்தப்பட்ட இலங்கை கப்பலை மீட்க களமிறங்கவுள்ள இந்தியா



செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011