மண்வெட்டி பிடியால் தாக்கி குடும்பஸ்தர் கொலை
லிந்துலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட வலஹா தோட்டத்தில் குடும்பஸ்தர் ஒருவர் மண்வெட்டி பிடியால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதலை நடத்திவிட்டு தலைமறைவான சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலில் கொல்லப்பட்ட நபர் தனது தாயுடன் நேற்றிரவு முரண்பட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட சத்தம் கேட்டு, அது தொடர்பில் விசாரிக்க சென்ற அயல் வீட்டு காரருடன், வாய் தகராறு ஏற்பட்ட நிலையில் குறித்த நபர் மண்வெட்டிப் பிடியால் அவரைத் தாக்கியுள்ளார்.
இதனால் படுகாயமடைந்த நபர் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
மேலதிக விசாரணை

அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (30) அதிகாலை உயிரிழந்துள்ளார்.
40 வயதுடைய வீரசாமி பெஞ்சமின் என்ற 3 பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.