கல்வியங்காட்டில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர்
யாழ்ப்பாணம் கல்வியங்காடு ஜி.பி.எஸ் விளையாட்டரங்கு வீதிக்கு அருகில் உள்ள வீடொன்றில் 54 வயதான குடும்பஸ்தர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் இன்று (12) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, உயிரிழந்த குடும்பஸ்தரின் மனைவி நேற்றையதினம் (11) திருமணச் சடங்கிற்கு சென்ற வேளை குடும்பஸ்தர் தனிமையாக வீட்டில் இருந்த நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காவல்துறையினர் விசாரணை

இன்று காலை உறவினரொருவர் இவர்களது வீட்டிற்கு சென்று பார்த்தபோது, குடும்பஸ்தர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதை அவதானித்து கோப்பாய் காவல்துறையினருக்கு அறிவித்ததை தொடர்ந்து சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலத்தில் அடிகாயங்கள் காணப்படுவதாகவும் இதனால் அக்குடும்பஸ்தர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
இச்சம்பவத்தில் 54 வயதான கணபதிப்பிள்ளை மகேந்திரன் என்ற குடும்பஸ்தரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.