யாழ்ப்பாண தமிழன் படைத்த சாதனை
Sri Lankan Tamils
Jaffna
By Jaso
முதுகில் செடில் குத்தி 10 கடல் மைல் தூரம் கடலில் படகினை இழுத்து வடமராட்சி செல்வா விளையாட்டுக் கழகத்தை சேர்ந்த சாண்டோ வீரர் பிரமசிவன் விமலன் சாதனை படைத்துள்ளார்.
குடத்தனை வடக்கு அன்னை வேளாங்கன்னி ஆலய திருநாளை முன்னிட்டு செல்வா விளையாட்டுக் கழகத்தின் ஆதரவுடன் குறித்த படகிழுத்தல் நிகழ்வு இன்று (06) புதன் கிழமை இடம்பெற்றுள்ளது.
முதுகில் செடில் குத்தி படகு இழுத்து
குடத்தனை வடக்கு கடற்கரையில் இருந்து சுப்பர்மடம் கடற்கரை வரையான சுமார் 10 கடல் மைல் தூரத்திற்கு இவ்வாறு முதுகில் செடில் குத்தி படகு இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.

சாதனை நிகழ்வு

காலை 7.30 மணிக்கு ஆரம்பித்த இந்த சாதனை நிகழ்வு முற்பகல் 09:15 மணிக்கு நிறைவுபெற்றிருந்தது.
நன்றி நவிலல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி