இந்திய மாநிலமொன்றில் தேர் இழுக்கும் போது நிகழ்ந்த அனர்த்தம் : பக்தர்கள் கடும் அதிர்ச்சி
தேர்த் திருவிழாவின் போது திடீரென தேரின் மேற்பகுதி சரிந்து வீழ்ந்ததால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் இந்தியாவின்(india) கர்நாடக மாநிலம் தக்சண கன்னட மாவட்டம் முல்கி நகரில் அமைந்துள்ள பப்பனாடு துர்க்காபரமேஸ்வரி கோவிலில் நடைபெற்றது.
தேரை இழுத்துவந்தவேளை மதியம் 2 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
நிகழ்வின் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. தேரின் மேற்பகுதி இரண்டாக பிரிந்து கீழே விழும் காட்சிகள் அதில் தெளிவாக பதிவாகியுள்ளன. இந்த நேரத்தில் தேரில் ஆசாரியர்கள் அமர்ந்திருந்ததாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அச்சமடைந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்
இதையடுத்து அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர். தேரை இழுக்கும் கயிறு திடீரென அறுந்ததன் பின்னர் தேரின் மேற்பகுதி சரிந்து விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ಬಪ್ಪನಾಡು ಶ್ರೀದುರ್ಗಾಪರಮೇಶ್ವರಿ ದೇವಳದ ರಥೋತ್ಸವ ಅದ್ಧೂರಿಯಾಗಿ ಸಾಗಿತ್ತು. ರಥ ಬೀದಿಗಳಲ್ಲಿ ರಥೋತ್ಸವ ಸಾಗುತ್ತಿದ್ದ ವೇಳೆ ತೇರಿನ ಮೇಲ್ಭಾಗ ಏಕಾಏಕಿ ಕುಸಿದಿದೆ. ತೇರಿನ ಮೇಲ್ಬಾಗ ಕುಸಿದ ವೇಳೆ ಅರ್ಚಕರು ತೇರಿನಲ್ಲೇ ಇದ್ದರು, ಅದೃಷ್ಟವಶಾತ್ ಯಾವುದೇ ಅಪಾಯ ಉಂಟಾಗದೆ ಪಾರಾಗಿದ್ದಾರೆ.@XpressBengaluru pic.twitter.com/vPdyI8w961
— kannadaprabha (@KannadaPrabha) April 19, 2025
இந்தச் சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை . சம்பவம் நடைபெற்ற பப்பனாடு கோவில், மங்களூருவிலிருந்து சுமார் 29 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. அங்கு ஆண்டு தோறும் ஏப்ரல் மாதத்தில் தேர் திருவிழா நடைபெறும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
