சாதித்து காட்டிய சீனா : மாரத்தான் போட்டியில் ஓடி சாதனை படைத்த ரோபோக்கள் (வைரலாகும் காணொளி)
சீன(china) தலைநகர் பெய்ஜிங் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட அரை மாரத்தான் போட்டியில் ரோபோக்களும் கலந்து கொண்டு 21 கிலோமீட்டர் தூரத்திற்கும் அதிகமாக ஓடி சாதனை படைத்துள்ளமை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சீனாவில் ரோபோ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அசுர வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. புதிது புதிதாக ரோபோக்களை வடிவமைத்து ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகின்றனர் சீன தொழில்நுட்பவியலாளர்கள்.
ஓட்ட பந்தயத்தில் பங்கேற்ற 21 ரோபோக்கள்
இதன்படி இன்றைய(19) தினம் பெய்ஜிங் நகரில் இசுவாங் அரை மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான நபர்களுக்கு மத்தியில் மனிதர்கள் போன்று வடிவமைக்கப்பட்டுள்ள 21 ரோபோக்களும் கலந்து கொண்டன. இதன்போது 21 கிலோமீட்டர் தூரத்திற்கு மேல் ஓடி இந்த ரோபோக்கள் அசத்தியுள்ளன.
This morning,The world's first robot half marathon race was held in Beijing. 20 robots participated, and the champion score was 2 hours and 40 room minutes, approximately 21 km.😃 pic.twitter.com/CiJvuNHpp9
— Sharing Travel (@TripInChina) April 19, 2025
முதல்முறை போட்டியில் ஓடுவதற்கு அனுமதி
சீனாவில் இதற்கு முன்பு நடந்த மாரத்தான் போட்டியில் மனித வடிவிலான ரோபோக்களை பார்க்க முடிந்தது. ஆனால் போட்டியில் களமிறங்கி ஓடவில்லை. முதல்முறை போட்டியில் ஓடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான காணொளிகள் இணையத்தில் பெரிதும் வைரலாகி வருகின்றன.
The world's first humanoid robot half-marathon is underway in Beijing -- the first time ever for robotic and human participants to run along the same route on separate tracks. #Robot #Marathon #China #humanoid #Beijing pic.twitter.com/BpLUZRcVIB
— China Xinhua News (@XHNews) April 19, 2025
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
