யாழில் கடலுக்குள் சென்றவரை காணவில்லை: தேடுதல் பணிகள் தீவிரம்
Jaffna
Northern Province of Sri Lanka
Sri Lanka Fisherman
By Laksi
வடமராட்சி கிழக்கு மருதங்கேணியை சேர்ந்த கடற்தொழிலாளர் ஒருவர் கடலில் தொழிலுக்கு சென்ற நிலையில் இன்னும் கரை திரும்பவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மருதங்கேணி கடலில் இன்று (16) அதிகாலை தொழிலுக்கு சென்ற போதே இவர் காணாமல் போயுள்ளார்.
தேடும்பணி
காணாமல் போனவர் மருதங்கேணி வடக்கைச் சேர்ந்த 60 வயதுடைய முத்துச்சாமி தவராசா என விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், அவர் சென்ற தெப்பம் மட்டும் கரையோதிங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் காணாமல் போனவரை தேடும்பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்